வராலாறுகளில் பெண் ஆட்சியாளர்கள்....!
வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அன்றைய மெரோவி (Meroe) ராஜ்ஜியத்தை கி.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷ் (Cush) அரசி ஆண்டிருக்கிறார்! இதன் தலைநகராக குஷிட்டே (Cushite) இருந்துள்ளது. இன்றைக்கு இந்த நாடு சூடான் என்று நம்பப்படுகிறது! இவர்தான் முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெறுகிறார்!
இலங்கை...!
கி.மு.35ல் ஸ்ரீலங்காவை அரசி சிவாலி ஆண்டார்! இவர் தமிழகம் வழிவந்த தமிழ்ப் பெண் என்பாரும், சிங்களவப் பெண்ணரசி என்று சொல்வாரும் உண்டு! இவருக்குப் பின் அரசி அனுலா கி.மு. 42லிருந்து 47வரை ஆட்சி செய்தார்!
எகிப்து...!
எகிப்தை ஏழாவது கிளியோபாட்ரா(Queen Cleopatra VII ) கி.மு 50 லிருந்து 51 வரை ஆட்சி செய்தார்.இவருக்குப் பின் கி.மு.80-81ல் பெர்நீஸ் ஆட்சி செய்தார். அரசி அர்சினோவ் (கி.மு.270முதல் 279வரை)அரசி நெ·ப்ரேட்டரி (கி.மு. 1225லிருந்து 1292 ) அரசி நெ·ப்ரேட்டிட்டி (கி.மு 1350-1372 ) அரசி டையீ (கி.மு.1340-1415) அரசி ஹேட்செப்ஸ்ட் (கி.மு.1498-1501) ஆகியோர் எகிப்தை ஆட்சி செய்துள்ள பெண் அரசிகளாவார்கள்!
பிரிட்டன்...!
பிரிட்டனின் அன்றைய இசினியா என்றழைக்கப்பட்ட நாட்டின் அரசன் பிராஸ்டகஸ் கி.பி.60ல் இறந்துவிட 61ல் அவனது மனைவி பொடீசியா ஆட்சிக்கு வந்தார். பின்னர் ரோமானியர்கள் இவளது ஆட்சியைக் கைப்பற்றினர்.
முதல் பெண் பிரதமர்...!
இலங்கையை ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மும்முறை ஆட்சி செய்தவர் இவர்தான் முதல் பெண் பிரதமர்! இவரின் மகளான சந்திரிகா குமாரதுங்கா தனது தாயாரை பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானதும் குறிப்பிடத்தக்கது!
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திராகாந்தி இரண்டு முறை பதவி வகித்த பிரதமரும் உலகின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்! (19 ஜன 1966 முதல் 24 மார்ச் 1977 வரையிலும் 14 ஜன. 1980 முதல் 31 Oct 1984 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்தபோது மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் இவர்!
இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர் (1969-1974) உலகில் மூன்றாவது பெண் பிரதமர்!
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பிரதமராக இருந்தவர் எலிசபெத் டோமிட்டின்(1975-1976)
பிரிட்டனின் தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் தாட்சர்!(4 மே1979 முதல் 28நவ.1990 வரை)ஐரோப்பிய நாடுகளிலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் உடையவர்.
ஏஞ்செலா மெர்க்கெல் ஜெர்மனின் கூட்டரசு வேந்தராக 22 நவம்பர் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். சாவோ டோம் மற்றும் பிரின்சிபே நாட்டின் பிரதமராக மரியா டோ கார்மோ சில்வேரா 8 ஜூன் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் மரியா டாஸ் நேவாஸ் செய்டா பேப்டிஸ்ட்டா டி செளஸா 7 அக். 2002 முதல் 16 ஜூலை 2003வரை ஆட்சிப்பொறுப்பிலிருந்தார். உக்ரைன் நாட்டின் பிரதமராக யூலியா டிமோஷென்கோ 24 ஜனவரி முதல் அந்த ஆண்டு செப்டெம்பர் 8ம்தேதி வரை ஆட்சிப்பொறுப்பிலிருந்தார்.
ராட்மிலா சேகெரின்ஸ்கா மசிடோனியாவின் பொறுப்பு பிரதமராக 2004ம் ஆண்டு இருந்தார்;
லூயிஸா டயஸ் டியாகோ ஆப் மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக 17 பிப். 2004 லிருந்து பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்று இருந்துவருகிறார்.
பின்லாந்தின் முதல் பெண் பிரதமராக அன்னெலி டுலிக்கி ஜாட்டீன்மாகி 2003ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து ஜூன் 18ம் தேதிவரை மூன்று மாதங்கள் பதவி வகித்துவிட்டு சொந்தக்காரணங்களால் பொறுப்பிலிருது ராஜினாமா செய்தார்.
தென்கொரியாவின் பிரதமராக சாங் சேங்கை அந் நாட்டு அதிபர் கிம் 2002ல் நியமித்தார். பாராளுமன்றம் இந்த நியமனத்தை நிராகரிக்கவே பத்துமாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!செனகல் நாட்டின் பிரதமராக மார்ச் 3 2001 முதல் 2002 நவம்பர் வரை மாமே மாடீயோர் போயி ஆட்சிப்பொறுப்பிலிருந்தார்.1999 டிச.10லிருந்து ஹெலன் எலிசபெத் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு முன் ஜென்னி ஷிப்லே 1997 லிருந்து டிசம்பர் 1999 வரை பிரதமராக இருந்தார். இவரே இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற தகுதியும் உடையவர்!
கயானா குடியரசின் பிரதமராக 1997ல் ஜேனட் ஜெகன் பதவி வகித்தார்.
பங்ளாதேசின் பிரதமராக இருந்த சேக் முஜிபுர் ரஹிமானின் மகளான சேக் ஹசீனா வஜெட் 1996லிருந்து 2001 வரை பிரதமராக இருந்தார். காலிடா ஜியா பங்ளா தேசின் பிரதமராக இரு முறை பதவி வகித்த பெண் பிரதமர். இஅவரும் முஜிபுர் ரஹ்மானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 லிருந்து 1996 வரை ஹாய்ட்டி நாட்டின் பிரதமராக இருந்தவர் கிளாடிட்டே ரிலேய் ஆவார்.
1994லிருந்து 1995 வரை பல்கேரிய பிரதமராக இருந்தவர் ரெனெட்டா இண்ட்ஷோழ்வா ஆவார்.ரவாண்டா குடியரசின் பிரதமராக 1993-94ல் பதவி வகித்தவர் அகாதே உவில்ஜியிமானா ஆவார்.
புருண்டியின் பிரதமராக 1993-94ல் இருந்தவர் சில்வி கினிகி.
துருக்கி நாட்டின் பிரதமராக டான்சு சில்லர் 1993-1996 வரை இருந்தார்.
கனடாவின் முதல் பெண் பிரதமராக கிம் கேம்ப்பெல் 1993ல் ஆறுமாதங்களுக்கு குறைவாக இருந்தார்.
போலந்து நாட்டின் பிரதமராக ஹான்னா சச்சோக்கா 1992-93ல் இருந்தார்.
பிரான்சின் பிரதமராக ஈடித் கிரஸ்ஸென்னும்(1991-1992)
மங்கோலியா- நையாம் ஓசோரின் டுய்யா 1999லிருந்தும், லிதுவேனியாவில் இரீனா டிகுட்டீன் இருமுறை பொறுப்பு பிரதமராக இருந்திருக்கிறார். 1990 முதல் 1991 வரை கஷிமிரா டாண்ட்டி புருன்ஸ்கினி லிதுவேனியாவின் பிரதமராக இருந்தார்.
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த புட்டோவின் மகஆள் பெனாசிர் புட்டோ இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த இந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுகோஸ்லோவியா நாட்டின் பிரதமராக (1982-1986) மில்கா பிளானிக் முதல் கம்யூனிச பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த பெருமை குரோ ஹார்லெம் ப்ருண்ட்லாண்டுக்கு உண்டு. இவர் உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
டொமினிகா குடியரசு நாட்டின் பிரதமராக மேரி யூஜினா சார்லஸ் (1980-1995) பதவி வகித்து மறைந்தவர்.
போர்ச்சுக்கல்லின் பிரதமராக மரியா டி லூர்து பின்டாசில்கோ 5மாதங்கள் 1979ல் பதவி வகித்தார்.
சுபாடாரின் யாஞ்மா மங்கோலியா அதிபராகSuhbaataryn Yanjmaa (1893-1962)ஸாங் குய்ங்லிங் Song Qingling (Sung Ch'ing-ling) (1893-1981)அர்ஜெண்ட்டினா - மரியா எஸ்டெல்லா Marங்a Estela ('Isabel') Martங்nez de Perந்n (1931-) பொலிவியா 1979-80 லிடியா கெய்லர் டேஜ்டா Lydia Gueiler Tejada (1926-) விஜிடிஸ் ·பின்போகடோட்டிர் முதல் அதிபர் மற்றும் அதிக ஆண்டுகள் அதிபராக ஐரோப்பிய நாடுகளூக்கான அதிபராக 1980 முதல் 1996 வரை Vigdங்s Finnbogadந்ttir (1930-) ஸான் மாரினோவின் அதிபர்களாக மரியா லியா பெடினி ஏஞ்சலினா 1981ல் Maria Lea Pedini-Angelini (1953?-) குளோரியான ரானோச்சினி இவர் இரண்டு தடவை அதிபர் Gloriana Ranocchini (1957-)அதன் பின் எட்டா செக்கொலி 199-92 வரைஅதன் பின் ரோஸா சாபாரனி 1999ல் இருந்தார்இவரைத் தொடர்ந்து மரியா டொமினிகா மிச்சொலோட்டியும்,சான்மரினோவின் எட்டாவது பெண் அதிபராக ·பாஸ்ட்டா சிமனோ மோர்காண்டி பொறுப்பு வகித்தார். தொடர்ந்து பெண் அதிபர் பொறுப்பேற்கும் நாடாக சான் மரினோ திகழ்ந்து வருகிறது! Fausta Simona Morganti (1944-)அகதா பார்பரா 1982லிருந்து 1987 வரை மால்ட்டா அதிபராக Agatha Barbara (1923-2002) கோரி அக்யூனோ பிலிப்பைன்ஸ் 1986 முதல் 1992 வரை ஆஸியாவின் முதல் பெண் அதிபர்! Corazon (Cory) Aquino (1933-) ஹாய்ட்டி குடியரசின் அதிபராக எர்த்தா பாஸ்கல் 1990-1991வரை நிகாரகுவாவின் அதிபராக வயலோட்டா பார்ரியோஸ்1990லிருந்து 1997 வரை இருந்தார்.மேரிராபின்சன் அயர்லாந்தின் அதிபராக 1990லிருந்து 1997வரைபாட்ரிசியா பஸ்ஸைனானி ஸான் மரினோவின் அதிபராக 1993ல் புருண்டியின் அதிபராக சில்வி கிங்கி 1993-94 வரை பொறுப்பு அதிபராகஸ்ரீ லங்காவின் அதிபராக சந்திரிகா குமாரதுங்கா லைபீரியாவின் அதிபராக ரூத் பெர்ரி 1996-97ல் இருந்தார்ஈக்வடாரின் அதிபராகரோசாலியா ஆர்டேகா செர்ரானோ 1997ல் இருந்தார் அயர்லாந்தின் அதிபராக மேரி மெகலீஸ் 1997ல் கயானாவின் அதிபராக ஜேனட் ஜகன் 1997-99 வரை அதிபராக இருந்தார்சுவிஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக ரூத் ட்ரெ·ப்யூஸ் 99லிருந்து 2000ஆண்டுவரை வைரா விக்கி ·ப்ரெபெர்க்கா லாட்வியா நாட்டின் அதிபராக் 199ல் நான்கு ஆண்டுகளுக்கான் பொறுப்பேற்றார்.மைரேயா எலிசா மொஸ்கோஸோ டி ஏரியாஸ் பணாம நாட்டின் அதிபராக 199-2004 வரை இருந்தார். ·பின்லாந்து நாட்டின் முதல் அதிபராக டார்ஜா காரினா ஹலோனென் மார்ச் 200லிருந்து இன்று வரை பதவியில் உள்ளார். இந்தோனேசியாவின் அதிபராக இருந்த சுகர்னோவின் புதல்வி மேகாவதி சுகர்னோ 2001லிருந்து 2004 வரை அதிபராக இருந்தார்.வளேரியா சியாவட்டா சான் மரினோவின் ஏழாவது அதிபராக(பெண்) 2003-04ல் னைனோ பர்ட்ஸானட்ஸ் ஜியார்ஜியாவின் அதிபராக 2003-2004ல் இருந்தார். எல்லன் ஜான்சன் சர்லீ·ப் லைப்பீரியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபராக ஜன.16, 2006லிருந்து இன்றுவரை நடப்பு அதிபராக இருப்பவர்!
முதல் பெண்கள்...!
முதல் பெண் பட்டதாரிகள்!
இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் காதம்பினி, கங்குலி, சந்திரமுகி பாசு என்பவர்கள் தான். இவர்கள் 1883ல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றனர்.
பிரிட்ஸ்கெர் பரிசு!
ஈராக்கைச் சேர்ந்த ஜுஹா ஹதீத் எனும் பெண்மணிதான், உலகிலேயே கட்டிடக் கலைக்கான, "பிரிட்ஸ் கெர்' பரிசை முதன் முதலாக பெற்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பெண் டி.ஜி.பி.,!
உத்தராஞ்சல் மாநிலத்தின் காவல் துறைத் தலைவராக 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா.இவர் தான் இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி., இந்தியாவின் இரண்டாவது பெண் ஐ.பி.எஸ்.,
இந்திய ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரலாக செப்., 2004ல் பொறுப்பேற்றார் புனிதா அரோரா.
முதல் இந்திய பெண் நடுவர்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் போட்டிகள் 2004ல் நடந்தபோது, போட்டிகளுக்கான நடுவர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த ரீது சேத்தி பணியாற்றினார். இந்திய பெண் ஒருவர் யு.எஸ்.,ஓபன் டென்னிஸில் நடுவராக பங்கேற்றது அதுவே முதல் முறை.
முதல் பெண்கள் காவல் நிலையம்!
இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் பிரிவு, "காவல் நிலையம்' 1973ல் கேரளாவில் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் அமர்த்தப்பட்டவர் பெயர் பத்மினி.
* * * *********************** ******************* ***
Thursday, March 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment